தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்திக் குறிப்பு எண்: 35/2021
நாள்:29.07.202
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை
எண்:05/2021, விளம்பர எண் 580-இல் 05.06.2021 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022,
பருவத்தில் சேருவதற்கான (Qualifying examination for admission to Rashtriya Indian
Military College, Dehradun, January 2022 Term) நுழைவுத் தேர்விற்கான
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதியானாது 21.06.2021 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்திக்
குறிப்பு எண் 22, நாள் 14.06.2021-இல் அறிவிக்கப்பட்டது. மேலும், இத்தேர்விற்கான
எழுத்துத் தேர்வாகிய "கணக்கு, பொது அறிவு மற்றும் ஆங்கிலம்" ஆகிய மூன்று
பாடப்பிரிவுகளுக்கும் (i.e. Mathematics, General Knowledge and English) 2021-ஆம்
வருடம் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும்
கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய
தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
வ. எண்
பாடம்
நாள் | கிழமை
தேர்வு நேரம்
(பி.ப மற்றும் மு.ப)
1
கணக்கு
09.30 to 11.00
2
பொது அறிவு
28.08.2021
சனிக்கிழமை
12.00 to 01.00
3
ஆங்கிலம்
02.30 to 04.30
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
No comments:
Post a Comment