மருத்துவ படிப்புகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் - EDUNTZ

Latest

Search here!

الخميس، 23 سبتمبر 2021

மருத்துவ படிப்புகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

 நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்பில் சேரும் தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் உணர்த்துகின்றன. 

 மருத்துவ படிப்பில் சேரும் தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் நீட் தேர்வுதான் என்று கூறப்படுகிறது. இதற்கான தீர்வு தமிழ்வழி மாணவர்களை ஊக்குவிப்பதுதான். தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதை நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைமுறைப்படுத்த உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். ஒருவேளை நீட் ரத்து செய்யப்பட்டாலும் கூட தமிழ்வழி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق