மின் தொழில் பழகுனர்
பயிற்சி: 27ல் நேர்காணல்
உடுமலை மின் வாரியத்தில், உதவித்தொகை
யுடன் தொழில் பழகுனர் பயிற்சி பெற வரும்,
27ம் தேதி நேர்காணல் நடக்கிறது.
உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்
பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள
அறிக்கை: உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்
குட்பட்ட பிரிவு அலுவலகங்களில், ஐ.டி.ஐ., ,
முடித்து இதுநாள் வரை பயிற்சி பெறாத, 60
பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், எலக்ட்ரீசியன், 25 பேர், வயர்மேன், 28
பேர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், 3, டிராப்ட்ஸ்
மேன் சிவில், 2, சர்வேயர், 1 மற்றும் இன்ஸ்ட்
ரூமென்ட் மெக்கானிக், 1 ஆகிய இடங்களுக்கு
தேர்வு செய்யப்பட உள்ளனர். தொழில் பழகு
னர்களுக்கு, 7 ஆயிரத்து 709 ரூபாய் ஊக்கத்தொ
கையில் ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கான நேர்காணல், வரும், 27ம் தேதி,
காலை, 9:30 மணி முதல் மாலை, 5:00 வரை,
மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்
தில் நடை பெற உள்ளது.
நேர்காணலில் பங்கேற்க, வேலைவாய்ப்பு
மைய பதிவுச்சான்று, தொழிற்பயிற்சி சான்றிதழ்
மற்றும் தொழிற்தேசிய சான்றிதழ், இதர கல்விச்
சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்
றிதழ், ஜாதிச்சான்றிதழ், பிறந்த தேதி சான்றிதழ்
மற்றும் ஆதார் அட்டையுடன் வர வேண்டும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق