ரயில்வே பணிமனைகளில்
இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு: பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, போத்தனூர்
தொலைத்தொடர்பு பணிமனை உட்பட இந்தியாவிலுள்ள 75 ரயில்வே
பணிமனைகளில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டத்தை
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தொடங்கி
வைத்தார்.
அவர் பேசும்போது, ரயில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50,000
இளைஞர்களுக்கு மூன்றாண்டு பயிற்சி அளிக்கப்படும். முதலில்
ரயில்வே பணிமனைகளில் ஆயிரம் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி
தொடங்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரீஷியன், வெல்டர், மெஷினிஸ்ட், பிட்டர்
பிரிவுகளில் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 முதல் 35 வயதுள்ள
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இணையதளம் வாயிலாக
விண்ணப்பித்து பயிற்சியை இலவசமாக பெற முடியும் என்றார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق