8,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு: அமேசான் திட்டம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 3 September 2021

8,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு: அமேசான் திட்டம்

8,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு: அமேசான் திட்டம் 

இந்தியாவில் நடப்பாண்டில் பல்வேறு பிரிவுகளில் 8,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவா் தீப்தி வா்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது: 

சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், குா்கான், மும்பை, கொல்கத்தா, நொய்டா, அம்ரிஷ்டா், அகமதாபாத், போபால், ஜெய்ப்பூா், கான்பூா், லூதியானா, புணே, சூரத் உள்ளிட்ட 35 நகரங்களில் புதிதாக 8,000-க்கும் அதிகமான பேருக்கு நேரடி வேலைவாய்ப்பினை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பம், வாடிக்கையாளா் சேவை, அலுவலகப் பணி, அன்றாட செயல்பாடு உள்ளிட்ட முக்கியமான பல்வேறு பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் நேரடி மற்றும் மறைமுகம் என இரண்டு பிரிவுகளிலும் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 

இதில், ஏற்கெனவே 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். கரோனா பெருந்தொற்று காலத்திலும், அமேசான் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கியது. வேலைவாய்ப்புக்கான தோ்வுப் பணிகள் அனைத்தும் காணொலி வாயிலாகவே நடைபெற்றது என்றாா் அவா்.

No comments:

Post a Comment