ஆபத்தில் உதவும் தற்காப்பு முறைகள் - EDUNTZ

Latest

Search here!

Sunday 12 September 2021

ஆபத்தில் உதவும் தற்காப்பு முறைகள்



பெண்கள் எந்த நேரத்திலும் ஆபத்துகளை சந்திக்கும் தைரியத்தோடும், விழிப்புணர் வோடும் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தற்காப்பு கலைகள் பெண்களின் பாதுகாப்புக்கு உதவும். அவற்றுள் சில முக்கியமான மற்றும் எளிதான முறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால், தேவைப் படும் நேரங்களில் கையாளலாம். 

ஹேமர் ஸ்டிரைக் (சுத்தியல் முறை தாக்குதல்) 

ஆபத்து வரும் நேரத்தில், பலரும் கைகளில் வளர்த்திருக்கும் நகங்களால் கீறியே எதிர்ப்பை வெளி காட்டுவது உண்டு. இதனால் கை நகங்கள் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. இதற்கு பதிலாக சாவியைக் கொண்டே தாக்க முடியும். வாகனங்களின் சாவியை கையில் வைத்திருந்தால், அதை சுத்தியல் போன்று கையில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு தாக்கலாம். நீள மான கீ செயின் இருந்தால், அதை எதிராளியின் முகத்திற்கு நேராக எறிந்து, எதிர்பாராத தாக்குதலால் அவரை செயலிழக்கச் செய்யலாம். இது சிறந்த தாக்குதல் முறையாக வெளிநாடுகளில் பெண் களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. 

க்ரோஇன் கிக் (இடுப்பில் அடித்தல்) 

எதிராளி உங்களை நோக்கி நெருங்கும்போது, உடனடியாக ஒரு காலை இடுப்பு வரை தூக்க வேண்டும். எதிராளி சற்றும் எதிர்பாராத நேரத்தில், அவரின் இடுப்புப் பகுதியை வலுவாக தாக்க வேண்டும். இதனால், அவர் நிலை தடுமாறி கீழே விழும் நேரத்தில் அங்கிருந்து தப்பிக்கலாம். இந்த முறையில் தாக்கும்போது, நீங்கள் நிலை தடுமாறி கீழே விழாமல் சுதாரித்துக் கொள்ள வேண்டும். 

ஹீல் பாம் ஸ்டிரைக் (உள்ளங்கையால் தாக்குதல்) 

இது மிகவும் எளிமையாகவும், துணிச்சலோடும்  எதிராளியைத் தாக்கும் முறையாகும். நமக்கு முன்பாக நிற்கும் எதிராளியை, உள்ளங்கையைக் கொண்டு அவரது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் தாக்க வேண்டும். இதன் மூலம் எதிராளியை நிலை குலைய செய்து, தப்பிக்கலாம். 

எல்போ ஸ்டிரைக் (முழங்கையால் தாக்குதல்) 

முழங்கையை மடக்கிக் கொண்டு, எதிராளியின் முகத்தில் தாக்க வேண்டும். இத்தகைய எதிர்பாராத தாக்குதலால் எதிராளி கீழே விழ நேரிடும். எதிராளி எதிரே இருந்தால் மட்டுமல்ல; நமக்கு பின்னால் இருந்தாலும் இந்த முறையின் மூலம் எளிதாக தாக்க முடியும். எதிர்பாராத வகையில், எதிராளியின் கிடுக்கிப் பிடியில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் கீழ்கண்ட வழி முறைகளை கையாளலாம். 

பியர் ஹக் அட்டாக் 

நமது பின் பக்கத்தில் இருந்து எதிராளி கட்டிப் பிடித்தால், முதலில் பயத்தை விடுத்து துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். கையை மடக்கி முழங்கை யால், அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பல மாகத் தாக்க வேண்டும். 

கையை கீழே இறக்கி தாக்குதல் 

எதிராளியின் கிடுக்கிப்பிடி வலுவாக இருந்தால், முதலில் நமது கையை கீழே இறக்கி, எதிராளியின் முழங்காலில் தாக்க வேண்டும். 

ஹெட் லாக்கில் தப்பிப்பது 

நமது தலை எதிராளியின் கிடுக்கிப்பிடியில் சிக்கினால், தலையை மெதுவாக அசைத்து அவரை தடுமாறச் செய்ய வேண்டும். பின்பு, கையால் அவரது இடுப்புப் பகுதியில் தாக்க வேண்டும்.

No comments:

Post a Comment