தினமும் மாதுளை ஜூஸை குடிப்பதால் இத்தனை நன்மைகளா...!! - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 21 سبتمبر 2021

தினமும் மாதுளை ஜூஸை குடிப்பதால் இத்தனை நன்மைகளா...!!

உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ள மாதுளையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளன. 


முக்கியமாக புற்றுநோய் செல்களின் உற்பத்தியை முடக்கிவிடும். பல்வேறு ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தொடர்ந்து ஒருவர் குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. தினமும் மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும். குறிப்பாக ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதுடன் டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும். இதில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், சருமத்தை ஆரோக்கியமாகவும், 

இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி தலைமுடி அடர்த்தியாக வளரும், முடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வரலாம். முக்கியமாக இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை, விட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகின்றன, நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான பிரச்சனைகள் வராது. மாதுளம் பழச்சாற்றில், கற்கண்டு சேர்த்துசாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் தீரும். 

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒருமாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும், தெம்பும், புதிய இரத்த உற்பத்தி ஆகிவிடும். மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு, மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சா ப் பி ட் டு வந்தால் மலச்சிக்கலிருந்து குணம் பெறமுடியும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق