அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச வண்ண சீருடைகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 2 September 2021

அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச வண்ண சீருடைகள்

'அங்கன்வாடி குழுந்தைகளுக்கு, இரண்டு ஜோடி வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம், கோவை, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, துாத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்,'' என, சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புகள்: 

 * முதியோர் கண்ணியமாக வாழ, மாநில மூத்த குடிமக்கள் கொள்கை; பெண்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் 

 * விதவையர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் 

 * புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சமூக அலுவலகங்கள், குழந்தை பாதுகாப்பு பிரிவு, இளைஞர் நீதிக் குழுமம், குழந்தை நலக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்

 * முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர், 35 வயதுக்குள், குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும் என்ற, வயது வரம்பு, 40 ஆக உயர்த்தப்படும் 

 * சத்துணவு திட்டத்தின் கீழ், 69.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,291 சத்துணவு கூடங்களுக்கு சமையல் அறை கட்டப்படும். 1,000 சத்துணவு மையங்களில் 80 லட்சம் ரூபாய் செலவில், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படும் 

 * ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில், தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் 7,228 அங்கன்வாடி மையங்களுக்கு, வாடகை உயர்த்தி வழங்கப்படும் 

 * அங்கன்வாடி குழந்தைகளுக்கு, இரண்டு ஜோடி வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம், கோவை, கன்னியாகுமரி, கரூர். நீலகிரி, சிவகங்கை, துாத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுப்படுத்தப்படும் 

 * சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில், சிறுவர்களுக்கான போதை தடுப்பு மையங்கள் 76 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் 

 * சமூக பாதுகாப்பு துறையில், மதுரை மண்டல அலுவலகம் மீண்டும் தோற்றுவிக்கப்படும் 

 * சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெறும் 41.1 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு, பள்ளிகள் திறந்த பின், ஊட்டசத்து குறைபாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நிவர்த்தி செய்யப்படும்.

No comments:

Post a Comment