அகில இந்திய வானொலியில் வேலைவாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 4 September 2021

அகில இந்திய வானொலியில் வேலைவாய்ப்பு


பகுதிநேர ஒலிபரப்பு உதவியாளர் மற்றும் செய்தியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சென்னை அகில இந்திய வானொலி நிலைய செய்தி பிரிவில் பகுதிநேர அடிப்படையில் பணிபுரிய, ஒலிபரப்பு உதவியாளர் மற்றும் செய்தியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒலிபரப்பு உதவியாளருக்கான வயது வரம்பு 21 முதல் 35-ம், செய்தியாளருக்கான வயது வரம்பு 21 முதல் 45 வரையுமாகும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இதழியல் அல்லது ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் அல்லது ஒலிப்பொறியியல் துறையில் பட்டயம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தகுதித்தேர்வு. எழுத்து, நேர்முகம் என இரண்டு கட்டங்களாக 16.10.2021 சனிக்கிழமை நடைபெறும். தேர்வு கட்டணமாக ரூபாய் 354 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்டணம் 266 ரூபாய். கட்டணத்தை www.onlinesbi.com/sbicollect/ என்ற இணைய தளம் வாயிலாக News Casual Assignee Exam Fees என்ற பிரிவில் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை, ஆன்லைன் கட்டண ரசீது, Resume, கல்வி சான்றிதழ் நகல், இருப்பிடச்சான்று, பிறந்த தேதிக்கான சான்று, ஆதார் எண் ஆகியவற்றுடன், The Deputy Director (News), Regional News Unit, All India Radio, No.4, Kamarajar Salai, Mylapore, Chennai-600 004 என்ற முகவரிக்கு, இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவும். 

*****

No comments:

Post a Comment