சிலருக்கு வயிறு புண் காரணமாக அல்லது அளவுக்கு அதிகமாக உணவு எடுத்து கொண்டாலே கூட வயிறு உப்புசம் பிரச்சனை வரும்.
சில உணவுகள் கூட வயிறு உப்புசம் பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீர் சத்து அதிகம் இருக்கும் காய்கள் பழங்கள் எடுத்து கொள்வது, வயிறு உப்புசம் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காய், தர்பூசணி, அன்னாசிப்பழம், திராட்சை வயிறு உப்புசம் குறைக்க உதவும்.
வயிறு உப்புசம் வரமால் தடுக்கும். இந்த பழங்களை ஸ்னாக்ஸ் ஆக எடுத்து கொள்ளலாம்.
இஞ்சி கஷாயம், இஞ்சி டீ போன்றவை எடுத்து கொள்வது, வயிறு உப்புசம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் இது செரிமானத்தை துரித படுத்தும். குடல் தசை இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதில் பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. வாழை பழம் சாப்பிடுவது, உப்புசம் பிரச்சனையை தீர்க்கும்.
சாப்பிட்டு முடிந்த 1 மணி நேரத்தில் எடுத்து கொள்ளலாம். சிலர் மூச்சு முட்ட முட்ட சாப்பிட்டு பின்னர் அவதி படுவார்கள். அந்த பிரச்சனைக்கு வாழை பழம் சிறந்த தீர்வு
எலுமிச்சை ஜூஸ் உடன் உப்பு சேர்த்து குடிப்பது, வயிறு உப்புசம் சரி செய்ய உதவும். இதில் சோடா சேர்க்காமல் வெறும் எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து குடிப்பது நல்லது.
தயிர் அல்லது மோர் வயிறு உப்புசம் பிரச்சனையை தீர்க்கும் சிறந்த உணவாகும். இது குடலில் இருக்கும் நல்லது செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவியாக இருக்கும். செரிமான சக்தியை அதிகபடுத்தும். மேலும், உணவு செரிமானம் அடைந்து வெளியேறுவதற்கு உதவியாக இருக்கும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق