தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்தொகை - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 1 September 2021

தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்தொகை

செய்தி வெளியீடு எண்.106 நாள்.28.08.2021 

பத்திரிகைச்செய்தி 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள்- 30.09.2021-க்குள்ளும், புதியது இனங்களுக்கு 05.11.2021-க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பங்களை https.//www.chennai.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களைத் தவறாது குறிப்பிடவேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதுப்பித்தலுக்கு 15.10.2021 முதல் செயல்பட துவங்கும், புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 14.11.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 16.11.2021 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 31.12.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். (மேலும் விவரங்களுக்கு பத்திரிக்கைச் செய்தியின் இணைப்பைக் காணவும்)


No comments:

Post a Comment