முதுகலை ஆசிரியர் தேர்வில்
வயது வரம்பு உயர்த்த பரிசீலனை
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
“முதுகலை பட்ட
தாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான
தேர்வில் வயது வரம்பை உயர்த்த
பரிசீலனை செய்து வருகிறோம்''
என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு,
தனியார் பள்ளிகள் தாளாளர், நிர்
வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்
கோவையில் நேற்று நடந்தது. பள்
ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்
பொய்யாமொழி பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கொரோனா காலத்தில்
பள்ளிகள் நடத்துவதில் சிரமம் இருப்பதாகவும், வேலை
யில்லாமல் இருக்கும் ஆசிரியர் கக்கு அரசு சார்பில்
உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல
ஆசிரியர்கள், பெற்றோர். அதிகாரிகள் என அனைவரும்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைவரின் எதிர்
பார்ப்பையும் சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்து
வருகிறோம்.
பெற்றோர் மத்தியில் கொரோனா குறித்து அச்சம் உள்
ளது. அதனால், பள்ளிகளுக்கு மாணவர்களை வரக்கூறி
கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு
கொரோனா பாதிப்பு இருந்தால் எங்கள் கவனத்திற்கு
கொண்டு வர வேண்டும். மறைக்க தேவையில்லை. எனி
னும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 6 முதல் 8ம் வகுப்பு
வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் கவனத்திற்கு
கொண்டு சென்று உள்ளோம்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான
தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை செய்து
வருகிறோம். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள்
தேவை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை
எடுக்கப்படும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق