இங்கிலாந்தில் வசிக்கும் ராஜ் கவுரி பவார், ஐ.க்யூ தேர்வில் அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். மனிதர்களின் மூளைத் திறனை சோதிக்கும் வகையில் ஐ.கியூ. தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் கவுரி பவார் அறிவியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் இவருக்கு 14 வயதே நிரம்பியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ‘பிரிட்டிஷ் மென்சா’ ஐ.கியூ தேர்வில் கலந்து கொண்ட இவர், 162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் ஐன்ஸ்டீன், ஹாக்கிங் பெற்றதை விட 2 மதிப்பெண் கூடுதலாக பெற்றுள்ளார். இதையடுத்து பிரிட்டிஷ் மென்சா குழுவில் ராஜ் கவுரி உறுப்பினராக சேர அழைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜ் கவுரி கூறுகையில்,‘தேர்வுக்கு முன்னர் சற்று பதற்றமாக இருந்தது, ஆனால் இப்போது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق