முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி
தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை -1, கணினி பயிற்றுனர் நிலை 1 ஆகிய பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இதற்கான அறிவிப்பு வெளியாகி, பின்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போதைய அறிவிப்பின் மூலம் 2207 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முதுகலைபட்டப்படிப்பில் 50 சதவீத தேர்ச்சியும், பி.எட். படிப்பும் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் பணிக்கு அது சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும். 1-6-2021 அன்றைய தேதிப்படி 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
வயது தளர்வும் உண்டு. ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-10-2021. ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: 13-11-2021, 14-11-2021, 15-11-2021. விண்ணப்பிக்கும் விதம், விண்ணப்ப நடைமுறைகள் சார்ந்த விரிவான விவரங்களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment