அணியும் ஆடை இருக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாக உணரும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் கச்சிதமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம். உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள் எவை?
அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை தெரிந்துகொண்டால் அழகோடும்,
தன்னம்பிக்கையோடும் ஜொலிக்கலாம்.
அதற்கான ஆலோசனைகளைத்தான் இப்போது
தெரிந்துகொள்ள போகிறோம்.
ஒல்லியாக இருப்பவர்களுக்கு...
மெலிந்த தோற்றம் கொண்டவர்களுக்கு பெரும்பாலான உடைகள் பொருத்தமானதாக இருக்கும்.
பென்சில் வகை பேண்ட்கள் கால்களை அழகாகக் காட்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள்
நீளமான பாவாடைகள் அணியலாம். சுடிதார் மற்றும் ரவிக்கை அணியும் போது, குட்டையான
கைப்பகுதிகளை கொண்ட ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.
உயரமாக இருப்பவர்களுக்கு....
உயரமாக இருப்பவர்கள், அவர்களின் உயரத்தைக் காட்டும் வகையில் இருக்கும் நீளமான
ஆடைகளை அணியலாம். லெகங்கா, நீளமான பாவாடைகள், கவுன் போன்ற உடைகள் பொருத்தமாக
இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் போஹோ ஸ்கர்ட்' அழகை அதிகரிக்கும். உயரத்தை
குறைத்துக்காட்ட விரும்புபவர்கள், பாவாடை கிராப் டாப் போன்றவற்றை அணியலாம்.
உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு..
உயரம் குறைவாக இருப்பவர்கள், டாப் ஒரு வண்ணத்திலும், பாட்டம் மற்றொரு வண்ணத்திலும்
இருக்குமாறு உடை அணியலாம். ஸ்கர்ட், கிராப் டாப் என்று பிரித்து அணியக்கூடிய உடைகள்
உயரத்தைக் குறைத்துக் காட்டும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலிருந்து கீழாக
கோடுகள் போட்ட உடைகளை அணிவது உயரத்தை அதிகரித்துக் காட்டும். கால்கள் தெரிவது
போன்ற ஆடைகளும் உயரத்தை அதிகரித்து காட்டும்.
பருமனாக இருப்பவர்களுக்கு....
அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் ஒல்லியாகத் தெரியலாம்.
பச்சை, கருப்பு, மெரூன் போன்ற நிறங்கள் பருமனான தோற்றம் கொண்டவர்களுக்கு பொருத்தமாக
இருக்கும். அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகள், பல லேயர்கள் கொண்ட ஆடைகள்,
பருத்தி ஆடைகள் மேலும் பருமனாகக் காட்டும் என்பதால் அவற்றைத் தவிர்த்துவிடலாம். கிரேப்
சில்க், ஷிபான் போன்ற உடலோடு ஒட்டும் ஆடைகளை அணியலாம்.
இவ்வாறு எடைக்கும், தோற்றத்துக்கும் ஏற்றவாறு உடை அணிவதன் மூலம், அழகோடும்,
தன்னம்பிக்கையோடும் மிளிரலாம்.
No comments:
Post a Comment