நம்பமுடியாத நன்மைகளை தரும் முந்திரி பருப்பு! ஒரு நாளைக்கு இவ்வளவு சாப்பிட்டாலே போதும்! - EDUNTZ

Latest

Search here!

الخميس، 16 سبتمبر 2021

நம்பமுடியாத நன்மைகளை தரும் முந்திரி பருப்பு! ஒரு நாளைக்கு இவ்வளவு சாப்பிட்டாலே போதும்!

அந்தவகையில் தற்போது முந்திரியை சாப்பிட்டு வருவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.


முந்திரியில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாக காணப்படுவதனால் இது எடை குறைப்பிற்கு உதவுகிறது. 


உடலுக்கு தீமை தரும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்க முந்திரி உதவுகிறது. எனவே முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்வது HDL கொழுப்பை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது.


 முந்திரியில் காணப்படும் அதிக அளவிலான நார்ச்சத்து ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாகவும் சீராகவும் வெளியிடுகிறது. எனவே நாள்தோறும் மிதமான அளவு முந்திரிகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம். 


 முந்திரியை அப்படியே சாப்பிடுவதை விட வறுத்த முந்திரிகளை எடுத்து கொள்வது அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை வழங்குகிறது.


முந்திரியில் காணப்படும் Zea Xanthin என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறமி, நம் விழித்திரையில் பாதுகாப்பு அடுக்கு ஒன்றை உருவாக்குகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை தடுத்து, கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.


முந்திரி சாப்பிடுவது மற்றும் முந்திரி எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவது ஆரோக்கியமான கூந்தலை உறுதி செய்கிறது. முந்திரி எண்ணெயில் உள்ள காப்பர், மெலனின் எனப்படும் தோல் மற்றும் முடி நிறமி உற்பத்திக்கு உதவுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق