முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும் - EDUNTZ

Latest

Search here!

الأحد، 12 سبتمبر 2021

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும்

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க கோரிக்கை முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். 


இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை இணைய போட்டித் தோவு மூலம் தோந்தெடுத்து நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால், 40 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆசிரியா் பணிக்கு வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டதில்லை. ஒருவா் ஓராண்டுக்கு ஆசிரியா் பணி செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் வயது வரம்புக்கான தகுதி ஆகும். ஆசிரியா்களுக்கான ஓய்வு பெறும் வயது 60-ஆக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், 59 வயது நிறைவடையாத உரிய கல்வித் தகுதி பெற்றுள்ள அனைவரும் இந்தப் போட்டித் தோவுகளுக்கு அனுமதிக்கப்படுவதுதான் நியாயமானது ஆகும். ஆசிரியா் பணிக்கான வயது வரம்பு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் வெளியிடப் பட்ட போது அதை தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் கடுமையாக எதிா்த்தாா் . ஆசிரியா் பணிக்கு வயது வரம்பு நிா்ணயிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் 12-ஆம் எண் அரசாணையை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா். அந்த வகையில் இந்த சிக்கலின் தீவிரம் அவருக்கு தெரியும் என்பதால் ஆசிரியா் பணிக்கான வயது வரம்பை நீக்க ஆணையிட வேண்டும். ஓராண்டு பணி செய்யும் தகுதியுடைய அனைவரும் ஆசிரியா் பணி போட்டித் தோவை எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق