செல்போனுக்கு வரும் எந்த ‘லிங்கை’யும் திறக்க வேண்டாம் பொதுமக்களுக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை - EDUNTZ

Latest

Search here!

السبت، 11 سبتمبر 2021

செல்போனுக்கு வரும் எந்த ‘லிங்கை’யும் திறக்க வேண்டாம் பொதுமக்களுக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை

சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கடந்த சில நாட்களுக்கு பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு பிரபல நிறுவனங்களில் ‘பார்ட் டைம்’ (பகுதி நேர) வேலை செய்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மோசடி நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது. அதில், ‘வாட்ஸ்-அப்’ குரூப்பில் இணைவதற்கான ஒரு லிங்க்கும் அனுப்பப்படுகிறது. அதனை ‘கிளிக்’ செய்தவுடன் ஒரு ‘ஆப்’ (செயலி) பதிவேற்றம் ஆகிறது. 

இந்த ஆப்பில் இருந்து ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறி, பண மோசடி நடக்கிறது. எனவே இந்த ‘ஆப்'களை (honey, making) பதிவேற்றம் செய்திருந்தாலோ அல்லது இதுபோன்ற வேறு பெயரில் உள்ள ஆப்களில் பணம் முதலீடு செய்திருந்தாலோ அதனை உடனடியாக கைவிட வேண்டும். மேற்கொண்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். 

இதுபோன்று பகுதி நேர வேலை என்று எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அணுகும் மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் வரும் எந்தவித லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق