'கல்வி' எனும் 'கண்' கொடுக்கும் ஆசிரியர்கள் - EDUNTZ

Latest

Search here!

الأحد، 5 سبتمبر 2021

'கல்வி' எனும் 'கண்' கொடுக்கும் ஆசிரியர்கள்

'கல்வி' எனும் 'கண்' கொடுக்கும் ஆசிரியர்கள் 

ஒரு நாட்டின் எதிர்காலம், குழந்தைகளின் கைகளில் உள்ளது. அவர்களை நல்ல குடி மக்களாக மாற்றும் பொறுப்பு, ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஒரு குழந்தையை நல்ல மனிதராகவும், சமூகத்தின் சிறந்த உறுப்பினராகவும், பொறுப்பான குடிமகனாகவும், எதிர்காலத் தலைவர்களாகவும், சாதனையாளர்களாகவும் மாற்றுபவர் ஆசிரியர். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியும், கல்வி யாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், 1962-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5-ந் தேதி இந்தியாவில் 'ஆசிரியர் தினம்' கொண்டாடப்படுகிறது. 

உலகின் தலைசிறந்த பணி கற்பித்தல், இதை உணர்ந்து உலக அளவில் பல்வேறு நாடு களில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம்' கொண்டாடுகிறார்கள். கல்வி தொடர்பான மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்கள் மற்றும் நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒழுக்கம், பண்பு, நம்பிக்கை, பொது அறிவு, விடாமுயற்சி ஆகியவற்றை கற்பித்து, நம் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி, முன்னேற்றம் அடையச் செய்யும் தன்னலமற்ற சேவையை மேற்கொண்டு வரும், ஒவ்வொரு ஆசிரியருக் கும் இந்த நாளில் நம்முடைய நன்றியை செலுத்துவோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق