இன்ஜினியரிங் பணி எழுத்து தேர்வு கறுப்பு பேனா கட்டாயம்! - EDUNTZ

Latest

Search here!

Friday 10 September 2021

இன்ஜினியரிங் பணி எழுத்து தேர்வு கறுப்பு பேனா கட்டாயம்!

இன்ஜினியரிங் பணி தேர்வு கறுப்பு பேனா கட்டாயம்! 

'இன்ஜினியரிங் பணிக்கான, டி.என்.பி.எஸ். சி., எழுத்து தேர்வில், கறுப்பு பேனாவை மட் டுமே பயன்படுத்த வேண்டும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா செய்திக்குறிப்பு: 


ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சார்நிலை பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு, செப்., 18ல், ஏழு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in
www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றப்பட் டுள்ளது. அதில், தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம். விடைத்தாளில் விடைகளை குறிப்பது, விப ரங்களை பூர்த்தி செய்வது போன்றவற்றுக்கு, கறுப்பு நிற மை உடைய பால் பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

தவறினால் அந்த விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படும். முற்பகல் தேர்வுக்கு, காலை, 9:15 மணிக்கு முன்பும், பிற்பகல் தேர்வுக்கு, பகல், மணிக்கு முன்பும் தேர்வு கூடத்துக்குள் வர வேண்டும். ஹால் டிக்கெட்டில் தேர்வு கூடத் தின் இடத்தை அறிய, 'க்யூ ஆர்' கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குகள் மொபைல் போன் அனுமதியில்லை. எனவே, மொபைல் போன் உள்ளிட்ட பிற உடைமைகளை, தேர்வு மையத் தின் பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment