ஆகாஷ் நிறுவனத்தின் ஆந்தே தேர்வு டிசம்பர் மாதம் நடக்கின்றது
ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் சார்பில், இந்த ஆண்டிற்கான, ஆந்தே தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில், முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவியர், தங்கள் பெற்றோருடன் நாசா செல்ல வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் பிரவேட் லிமிடெட்' நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுகள் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளித்து வருகிறது.
33 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த இந்நிறுவனத்தின் சார்பில், ஆகாஷ் நேஷனல் டேலனட் ஹன்ட் எக்சாம் எனும், ஆந்தே தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து, அந்த நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:எங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பலர் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானிகளாக திகழ்கின்றனர். 2012ம் ஆண்டு முதல் ஆந்தே தேர்வு நடத்துகிறோம். இதுவரை நாடு முழுதும், 23 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
ஏழாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில், நிறுவன விதிப்படி முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவியர், பெற்றோருடன், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கு அழைத்து செல்லப்படுவர்.அதே போல், உதவித் தொகை, ரொக்கப்பரிசுகளும் ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் டிச., 4ம் தேதி முதல், ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன வாயிலாக நடத்தப்படும். ஒரு மணி நேர ஆந்தோ ஆன்-லைன் தேர்வு அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிக்கு இடையே நடத்தப்படும்.
ஆப்-லைன் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள்ளாகவும், மாலை 4:00 மணி முதல் 5:00 மணிக்குள்ளாக கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.இத்தேர்வு மொத்தம் 90 மதிப்பெண்களை கொண்டு இருக்கும். நீட் தேர்விற்கு தயாராகும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 2022 ஜனவரியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق