முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 10 سبتمبر 2021

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை

சட்டசபையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்த பின், அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்: 


 * 259 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் கல்லுாரி விடுதிகளில், தலா ஒரு செம்மொழி நுாலகம், 2.59 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் 

 * விடுதி மாணவர்களுக்கு, தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் வழியே, தனித் திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் 
 * பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான, பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் 

 * கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற, முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக, முதல் தலைமுறை பட்டதாரி என, நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் 

 * கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ்வழங்கப்படும், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள், அனைவருக்கும், 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் 

 * மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளுக்கு, 7.80 லட்சம் ரூபாய் செலவில் பரிசுகள் வழங்கப் படும். 20 கல்லுாரி மாணவியர் விடுதிகளில், 23.60 லட்சம் ரூபாய் செலவில், 'பயோமெட்ரிக்' கருவிகள் பொருத்தப்படும்

 * பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில், மாணவ - மாணவியர் சேர்க்கைக்கான ஆண்டு வருமான வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் 

 * கள்ளர் பள்ளிக் கட்டடங்களில், 6 கோடி ரூபாய் செலவில், பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பள்ளிகளில், 9ம் வகுப்பில், ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவக்கப்படும்; முதலாம் வகுப்பில், ஆங்கில வழியிலான வகுப்புகள் துவக்கப்படும் 

 * நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் வழங்கப்படும், திருமண உதவித் தொகை, ஆண்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகவும்; பெண்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் 

 * இரண்டு பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் பள்ளி விடுதிகள், கல்லுாரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும். 

 * சிறப்பாக செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்படும் 

 * விடுதி மாணவர்களுக்கு, கட்டுரைப்போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவை, 'கலைத்திருவிழா' என்ற பெயரில் நடத்தப்படும். இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து, புத்தகம் வெளியிடப்படும்.இவ்வாறு, 30 அறிவிப்புக்களை அமைச்சர் வெளியிட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق