மத்திய அரசின் எம்எஸ்எம்இ
தொழில்நுட்பமேம்பாட்டுமையம்
சார்பில், மின்னணு சந்தை
குறித்த பயிற்சி வகுப்புகள்
நடத்தப்பட உள்ளன. வரும் 25,
26 மற்றும் அக்.2, 3-ம் தேதிகளில்
பிற்பகல் 2 மணி முதல் மாலை
6 மணி வரை இந்த வகுப்புகள்
நடைபெறும்.
இப்பயிற்சியில் அரசு மின்
னணு சந்தை என்ற ஆன்லைன்
போர்டல் மூலம் விண்ணப்பித்து,
அரசின் ஆர்டர்களை எவ்வாறு
பெறுவது, பல்வேறு அரசுத்
துறைகள், பொதுத்துறை நிறு
வனங்கள், அரசு நிறுவனங்கள்
ஆகியவற்றில் பொருட்களை
விற்பனை செய்வது, சேவை
வழங்குவது
உள்ளிட்டவை
குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
வர்த்தக உரிமையாளர்கள்,
சிறு, குறு, நடுத்தர உற்பத்தி
நிறுவனங்கள், கணக்கு மற்றும்
நிதித்துறை நிபுணர்கள்,
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
நிறுவனங்கள், விற்பனை
மற்றும் சந்தைப் பிரதிநிதிகள்,
வேலை தேடுபவர்கள், தொழில்
முனைவோர் ஆகியோருக்கு
இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பயிற்சிக் கட்டணம் ரூ.4,720.
இப்பயிற்சி குறித்த கூடுதல்
விவரங்களுக்கு 7305168118,
9500034831,
91595 87689
ஆகிய மொபைல் எண்களில்
தொடர்பு கொண்டு அறியலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment