கொழுப்பு தசைகளை குறைக்கும் வழிகள் - EDUNTZ

Latest

Search here!

الأحد، 19 سبتمبر 2021

கொழுப்பு தசைகளை குறைக்கும் வழிகள்

உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, தசைகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் தோற்றத்திலும், ஆரோக்கியத்திலும் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே இருப்பது, உடற்பயிற்சி செய்யாதது, துரித உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது போன்ற காரணங்களால் தேவையற்ற கொழுப்பு உடலில் சேருகிறது. உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றால் கொழுப்பு தசைகளை குறைக்க முடியும். 


இவற்றைத் தவிர கீழ்காணும் வழிமுறைகளும், தசைகளில் சேரும் கொழுப்பைக் குறைப்பதற்கு உதவும். உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவை யற்ற கொழுப்பு குறையும். அவகேடோ பழத்தில் கெட்டக் கொழுப்பை எரிக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் சாலட் தயார் செய்து சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடு வதால் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கலாம். சிவப்பு அரிசி, கொண்டைக் கடலை, கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற முழு தானியங்கள், பச்சை பட்டாணி, பழங்கள் போன்றவற்றில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. 

பப்பாளிக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் தசைகளில் உள்ள கொழுப்பு குறைந்து, உடல் மெலியும். காபி, அட்ரினலின் சுரப்பியைத் தூண்டும் ஆற்றல் கொண்டது. தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால், உடலில் சேரும் அதிகப் படியான கொழுப்பைக் குறைக்கலாம். உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு காபியை பருகினால், அது எர்கோஜெனிக் போல செயல்பட்டு, தசைகளில் படிந்துள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்றி எரிக்கும். 

தினமும் காலையில் எழுந்தவுடன், காலை உணவுக்கு முன்பு சூடான நீரில் இலவங்கப்பட்டைத் தூளை கலந்து குடிக்கலாம். இதன் மூலமும் அதிகப் படியான கொழுப்பைக் குறைக்க முடியும். உடல் எடையைக் குறைப்பதில் சுரைக்காய் பெரும் பங்கு வகிக்கிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் சுரைக்காயை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையும். 

ஒரு கப் பாலில், 4 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து, நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு கரையும். கொள்ளு பயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தசைகளை உறுதியாக்கி, கொழுப்பைக் குறைக்கலாம். வாழைத்தண்டு மற்றும் அருகம்புல் போன்றவற்றை சாறாக்கி பருகலாம். தினமும் காலையில் அரை மணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால், தசைகளில் படிந்திருக்கும் கொழுப்பு கரையும். உடல் குறைந்து புத்துணர்வு மேலோங்கும். எடை

ليست هناك تعليقات:

إرسال تعليق