கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆண்டுதோறும் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும்.
இவ்விருதுடன் ரொக்க பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை என பெயர் மாற்றப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி. பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும்.
மேலும், அவரது நினைவு நாளான நவம்பர் 18ஆம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment