மழைக்கால செடிகள் பராமரிப்பு - EDUNTZ

Latest

Search here!

الأحد، 19 سبتمبر 2021

மழைக்கால செடிகள் பராமரிப்பு

கால நிலைக்கு நிலைக்கு ஏற்றவாறு உயிர்களின் இயல்பில்மாற்றம் ஏற்படும் அதுபோலவே  செடி, கொடிகளின் இயற்கை தகவமைப்பும் பருவ காலத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். எனவே ஒவ்வொரு தாவரத்தைப் பொறுத்து, அவற்றுக்கான முன்னெச் சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதை பருவ நிலை மாற்றங்களில் இருந்து அழியாமல் பாதுகாக்கும். அந்த வகையில் மழைக்காலத்தில் செடிகளை பராமரிப்பது பற்றி பார்ப்போம். தோட்டங்களில் செடிகளுக்கிடையே சீரான இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 


மழைக்காலத்திற்கு முன்பே நிலத்தில் நடப்பட்டி ருக்கும் தாவரங்களுக்கு, சரியான முறையில் பாத்தி அமைக்க வேண்டும். இதன் மூலம் மழை நீர் அதிக அளவு தேங்கி, செடிகள் அழுகுவதைத் தடுக்கலாம். செடிகள் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில், தண்ணீர் தேங்காமல் இருக்க தொட்டிகளின் கீழ் புறத்தில் துளைகள் ஏற்படுத்துவது அவசியமானது. தொட்டியை நேரடியாக தரையில் வைக்காமல் கற்களால் மேடை போன்று அமைத்து, அதிகப்படியான தண்ணீர் வழிந்தோடும் வகையில் செய்ய வேண்டும். மழை பெய்து முடித்த சில நாட்களில், செடிகளின் வேர்ப்பகுதியில் இருக்கும் மண், மழை நீரில் ஊறி இறுக்கமாக காணப்படும். இதனால் செடிகளின் வளர்ச்சி தடைபடலாம். வேர்ப்பகுதியில் களிமண் போன்று இறுக்கமான மண் கலவை இருந்தால் அதனை செப்பனிட்டு சரி செய்யலாம். 

 வேர்ப்பகுதியில் உள்ள மண் பரப்பில், மஞ்சள் தூள் தூவுவதன் மூலம் செடிகளை கிருமிகளின் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முடியும். சில செடிகளுக்குத் தேவையான பச்சையம் சரியாக கிடைக்காமல் அதன் இலைகள் பழுப்பு நிறத்தில் மாறி விடும். மக்னீசியம் சல்பேட்டை அதிக அளவு நீரில் கரைத்து, இலைப்பகுதியில் மட்டும் சிறிதளவு ஸ்ப்ரே செய்தால் செடிகளில் ஏற்படும் பச்சையம் இழப்பை சரி செய்யலாம். இந்த கரைசல் வேர் பகுதியில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் செடிகளில் ஈரப்பதம் இயற்கை யாகவே இருக்கும் என்பதால், சரியான அளவு உ உரமிட்டு நன்றாக பராமரித்தால், பூ மற்றும் காய்கள் அதிக அளவில் கிடைக்கும். 

நீண்ட நாள் கழித்து பெய்யும் மழை நீரில் அமில தன்மை அதிகமாக காணப்படும். இது செடிகளில் சத்து இழப்பை ஏற்படுத்தும். இதனை சரி செய்வதற்கு படிகாரக் கல்லை தூள் செய்து, அதை தண்ணீரில் கரைத்து வேர் பகுதியில் ஊற்றலாம். இது செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். அதிக மழை மற்றும் காற்று ஆகியவற்றால் சாய்ந்த கிளைகளை, கயிற்றைக் கொண்டு கட்டு வதன் மூலம் செடிகள் சேதமடைவதைத் தவிர்க்கலாம். மிகவும் மென்மையான செடிகளாக இருந்தால் அவற்றை மழைக்கு முன்னரே பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவது சிறந்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق