புத்தாக்க பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தி பாடம் நடத்துவது எப்படி? கல்வித்துறை முக்கிய அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Friday 10 September 2021

புத்தாக்க பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தி பாடம் நடத்துவது எப்படி? கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

புத்தாக்க பயிற்சி கட்டணத்தை பயன்படுத்தி பாடம் நடத்துவது எப்படி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு


புத்தாக்க பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் விளக்கம் அளித் துள்ளார். இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவு: 

கொரோனா பெருந் தொற்று காரணமாக பள்ளிகள் நீண்டகாலம் மூடப்பட் டிருந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை சரி செய்ய பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிவுரைப்படி புத்தாக்க பயிற்சி கட்டகங்கள் 2 முதல் 12ம் வகுப்புவரை முந்தைய வகுப்பிற்கான அடிப்படை மற்றும் முக்கிய பாடக்கருத்துக்களை உள்ளடக்கி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு சாப்ட் காப்பி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு, பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன. 


அனைத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புத்தாக்க பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டுள் ளது. மிக அடிப்படையான பாடக்கருத்துருக்கில் கற்றல் அடைவு போதிய அளவு மாணவர்கள் பெற்றிருந்தால் அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கிய பாடக்கருத்துருக்களை கற்பிக்கலாம். சில பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் மூலமாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பாடங்கள் முடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

பள்ளிகளின் இடவசதிக்கு ஏற்றவாறு சில பள்ளிகளில் தினமும் வருகை புரியும் வகையிலும் வேறு சில பள்ளிகளில் ஒருநாள்விட்டு ஒருநாள் மாணவர்கள் வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளும் ஒரே மாதிரியான கட்டகத்தை பயன்படுத்த தேவை எழாத நிலை உருவாகியுள்ளது. எனவே மாணவர்களின் கற்றல் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் ஆய்வு செய்து அதற் கேற்ப புத்தாக்க பயிற்சி கட்டகத்தை உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 


ஆன்லைனில் பங்கேற்காத சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர் களுக்கு அதற்கேற்ப திட்டமிட்டு புத்தாக்க பயிற்சி கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துருக்களை 40 முதல் 45 நாட்களுக்குள் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு பள் ளியிலும் பாடத்தில் மாணவர்களின் கற்றல் அடைவின் நிலைக்கு ஏற்ப முறையாக திட்டமிட்டு புத்தாக்க பயிற்சி கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துக்களை கற்பிக்க பள்ளிகளை அறிவுறுத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment