Credit Card, Debit Card முக்கிய செய்தி: அக்டோபர் 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும்-RBI - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 21 سبتمبر 2021

Credit Card, Debit Card முக்கிய செய்தி: அக்டோபர் 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும்-RBI

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆட்டோ-டெபிட் விதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும். 

இதன் காரணமாக, வங்கிகள், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, அக்டோபர் 1, 2021 முதல் ஆட்டோ பரிவர்த்தனைகள் செய்யும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.

"ரிசர்வ் வங்கியின் (RBI) தொடர்ச்சியான கட்டண வழிகாட்டுதல்களின்படி, 20-09-21 முதல், தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான உங்கள் ஆக்சிஸ் வங்கி கார்டில் (களில்) தற்போதுள்ள நிலையான வழிமுறைகள் செல்லுபடியாகாது

தடையற்ற சேவையைப் பெற, உங்கள் கார்டைப் பயன்படுத்தி வணிகருக்கு நேரடியாக பணம் செலுத்தலாம் " என ஆக்சிஸ் வங்கி (Axis Bank) அறிவிப்பு விடுத்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்: - புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தவுடன், அட்டைதாரர்களால் வணிகர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையான அறிவுறுத்தல்களின் அடிப்படையிலான ரெக்கரிங் பரிவர்த்தனைகள், அங்கீகாரத்தின் கூடுதல் காரணி (AFA) வரம்பிற்குள் கொண்டு வரப்படும். - அனைத்து ரெக்கரிங் பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அங்கீகாரம் தேவைப்படும்.

பணம் செலுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த ₹ 5,000 க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் (OTP) தேவைப்படும். ATM-ல் எவ்வளவு பணம் எடுத்தாலும் எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம்: வங்கியின் அட்டகாச சலுகை - கார்டில் சார்ஜ் / டெபிட் ஆவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரம் முன்னதாக, அட்டைதாரருக்கு பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பு (pre-transaction notification ) அனுப்பப்படும். - பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பைப் பெற்றவுடன், அட்டைதாரருக்கு (Card Holders) குறிப்பிட்ட பரிவர்த்தனை அல்லது இ-மாண்டேட்டிலிருந்து விலக்கிக்கொள்ளும் வசதி கிடைக்கும். - வழங்குநரிடமிருந்து தெளிவான, நேர்த்தியான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பைப் பெறுவதற்கு, அட்டைதாரருக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் போன்ற பல ஆப்ஷன்கள் அளிக்கப்படும். - பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பைப் பெறும் முறையை மாற்றுவதற்கான வசதியும் அட்டைதாரருக்கு வழங்கப்படும். - டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் இந்த புதிய விதி பொருந்தும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ரிசர்வ் வங்கி கூடுதல் அங்கீகார காரணி (AFA) உடன் ஆன்லைன் பரிவர்த்தனைகள் தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதற்கான காலக்கெடுவை ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது. 

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக்கவும் வாடிக்கையாளர்களை மோசடி பரிவர்த்தனைகளிலிருந்து பாதுகாப்பதற்காகவும், RRB-க்கள், NBFC-க்கள் உட்பட அனைத்து வங்கிகள், பேமெண்ட் கேட்வேக்கள் ஆகியவை, தானியங்கி ரெக்கரிங் கட்டண செலுத்தலுக்காக AFA உடன் செப்டம்பர் 30, 2021 -க்குள் இணங்க வெண்டும் என RBI உத்தரவிட்டது. "நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு அப்பால் கட்டமைப்பை முழுமையாகப் பின்பற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று ரிசர்வ் வங்கி எச்சரித்தது. RBI முக்கிய அறிவிப்பு: ஜனவரி 1 முதல் மாறவுள்ளது கார்ட் கட்டண முறை!

ليست هناك تعليقات:

إرسال تعليق