வணிகவரித்துறையில் வரலாற்றில் முதன்முறையாக | உதவியாளர்கள் 1000 பேருக்கு துணை வரி அலுவலராக பதவி உயர்வு - EDUNTZ

Latest

Search here!

Monday 4 October 2021

வணிகவரித்துறையில் வரலாற்றில் முதன்முறையாக | உதவியாளர்கள் 1000 பேருக்கு துணை வரி அலுவலராக பதவி உயர்வு

தமிழக வணிக வரித்துறையில் உதவியாளர், துணை வணிகவரி அலுவலர், மாநில வரி அலுவலர், உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இத்துறையில், கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு பதவி உயர்வு வழங்கவில்லை. 

இது தொடர்பாக உதவியாளர்ள் பல முறை போராட்டம் நடத்தியும் பயனில்லை. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நிலையில், அமைச்சர் மூர்த்தியை சந்தித்து பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவரித்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை வைத்தது. இதையேற்று, உதவியாளர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக நிதித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைத்தது. தற்போது நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், பதவி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இது குறித்து தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறியதாவது: தலைமைச் செயலகத்தில், கடந்த மாதம் அமைச்சரைச் சந்தித்தபோது அறிவிப்பினை நடைமுறைப்படுத்த அனைத்து நிலைகளிலும் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்களை துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அதற்கான ஊதியத்துடன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நிதி துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

வணிகவரித் துறை வரலாற்றில் 1000 பேருக்கு பதவி உயர்வு என்பது இதுதான் முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment