வேளாண் தமிழ்வழி படிப்பில் சேர 10 ஆயிரம் மாணவர்கள் விருப்பம்
:தமிழ்நாடு வேளாண் பல்கலையின் இளநிலை மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 10 ஆயிரம் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரசு தரப்பில் நடப்பாண்டில் புதிதாக தோட்டக்கலை கல்லுாரி கிருஷ்ணகிரி ஜீனுாரிலும், வேளாண்மை கல்லுாரிகள் கரூர், கீழ்வேளூர் நாகப்பட்டினம், செட்டிநாடு சிவகங்கை மாவட்டத்திலும் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கான இடங்களும் கலந்தாய்வில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டீன் கல்யாணசுந்தரம் கூறுகையில்,
''இளநிலை வேளாண் படிப்புகளுக்கு நடப்பாண்டில், 47,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.புதிதாக திறக்கப்பட்டுள்ள நான்கு கல்லுாரிகளில், 240 இடங்கள், புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ் வழி படிப்பு மூலம், 120 இடங்கள் கலந்தாய்வில் கூடுதலாக சேர்க்கப்படும்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள் தமிழ்வழியில் துவங்கப்பட்டுள்ளன.
இதற்கு தனியாக விண்ணப்பிக்காமல், விருப்பம் தெரிவிக்கும் வாய்ப்பு விண்ணப்பத்தில் வழங்கப்பட்டது. அதில், தமிழ் வழியில் சேர, 10 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அனைவரும் கலந்தாய்வில் தமிழ்வழியைதேர்வு செய்வார்கள், பங்கேற்பார்கள் என்பதை உறுதியாக கூறமுடியாது,'' என்றார்.
No comments:
Post a Comment