கரோனா: இடைநின்ற 1.28 லட்சம் மாணவர்கள்
மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு
தமிழகத்தில் கரோனா தொற்றின் காரண
மாக இடைநின்ற ஒரு லட்சத்து 28 ஆயிரம் மாணவர்களை
மீண்டும் பள்ளிகளில் கல்வித்துறையினர் சேர்த்துள்ளனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:
அனைத்து மாவட்டங்களிலும் எமிஸ் தளத்தில் உள்ள மாண
வர்கள் விவரங்களை நேரடியாக ஆய்வு செய்யவும், வீட்டு
வாரியாக கணக்கெடுப்பு நடத்தி பள்ளியில் சேராத மற்றும்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்ட
றிந்து பள்ளியில் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி
ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுமார் 2 லட்சம் மாண
வர்கள் பள்ளிக்கு வராமல் இடைநின்றிருப்பது தெரியவந்
தது. வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்
புரம் உட்பட மாவட்டங்களில்தான் இடைநிற்றல் அதிக
மாகக் காணப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பெற்
றோர், உறவினர்களை சந்தித்து பேசி இடைநின்றவர்களில்
1.28 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்
பட்டுள்ளனர் மீதமுள்ள மாணவர்களை கண்டறிந்து பள்
ளிகளில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவ
தாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment