பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம். உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சிநர்ஸிங், பி.பார்ம்., பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சுமற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப் படிப்புகள் உள்ளன. 

இதில் சுமார் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இப்படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்வது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 

நவ.8-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். விண்ணப்பம், தகவல்குறிப்பேட்டை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் ‘செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈவெரா பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010’ என்ற முகவரியில் நவ.10-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.



Post a Comment

Previous Post Next Post

Search here!