அரசு கலை கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்த அனுமதி அரசாணை வெளியீடு - EDUNTZ

Latest

Search here!

Saturday 2 October 2021

அரசு கலை கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்த அனுமதி அரசாணை வெளியீடு

அரசு கலை கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்த அனுமதி அரசாணை வெளியீடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2-வது ஷிப்டு (சுழற்சி-2) வகுப்பு எடுக்க 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் ஏற்கனவே பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது முதலாவது ஷிப்டு வகுப்புகளுக்கு 2 ஆயிரத்து 423 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- 2021-22-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் முறையான உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதிநாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக முதலாவது ஷிப்டில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 423 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது. 

அதற்கான செலவினமாக ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 5 மாதங்களுக்கு ரூ.24 கோடியே 23 லட்சம் ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment