கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர்ந்த மாணவர்களுக்காக, தனியார் பள்ளிகளுக்கு 420 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.



மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ௫ முதல், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். இதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பில், 20 சதவீத இடங்களில் கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.




இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம். அவர்களுக்கான கட்டணத்தை, தமிழக அரசே பள்ளிகளுக்கு வழங்கும்.அந்த வகையில், கடந்த கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 419.50 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, பள்ளி கல்வி துறை நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!