போக்குவரத்து துறையில் 6,000 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். 

மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.பின், ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி: தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக, மத்திய பணிமனை, அடையாறு, திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட, 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. 


பணிமனைகளில் வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் அமைய உள்ளன. இதற்கான ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. இன்ஜின், 'சேஸ்' உள்ளிட்ட நல்ல நிலையில் உள்ள 1,500 பழையப் பஸ்களுக்கு, கூண்டு கட்ட, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

போக்குவரத்து பணியாளர் ஊதிய ஒப்பந்தம் குழு, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி முடிவு எட்டுவர். புதிதாக 2,213 மற்றும் 500 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளன. சாதாரண கட்டண பஸ்களில் தினசரி, 38 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்கின்றனர். இது மகளிரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இன்று வரையில், 34 கோடி மகளிர், கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு, பொது மக்கள் கூட்ட நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல, பஸ்கள் இயக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

6,000 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்கள்பாதித்தாலும், பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!