இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 19 October 2021

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை மொத்த 

காலியிடங்கள் : 23 பணி : மேனேஜர் பணி : சீனியர் மேனேஜர் பணி : சீஃப் மேனேஜர் பணி : அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் பணி : டெபுடி ஜெனரல் மேனேஜர் பணி : ஜெனரல் மேனேஜர் வயது வரம்பு: 01.09.2021 தேதியின்படி 23 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் உள்ளன. 

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். தகுதி: பொறியியல்துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ முடித்தவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 3 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

சம்பளம் : 

மாதம் ரூ.94,000 - ரூ.2,92,000 தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : http://www.ippbonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

 விண்ணப்பக் கட்டணம்: 

பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். மேலும் விவரங்கள் அறிய: https://www.ippbonline.com/documents/20133/133019/1633694018080.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.10.2021

No comments:

Post a Comment