தொடக்க கல்வித்துறை, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாதிரி கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: 1.11.2021 அன்று பள்ளிகள் திறக்கப்படும்போது, எனது மகன் அல்லது மகள் பள்ளிக்கு அனுப்ப நான் முழுவிருப்பத்துடன் ஒப்புதல் அளிக்கிறேன். என் மகள் அல்லது மகன் நன்றாக இருக்கிறார். 

அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், எனக்கு முழுமையாக தெரியும். எனது குடும்பத்தில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர் கொரோனா குறித்து வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் நான் முழுமையாக பின்பற்றுவேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தவிர குடும்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் பெற்றோர் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடித நகலில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிய பிறகே பள்ளிகளில் குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கடிதம் தற்போது பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கும் நாளில் இந்த கடிதங்களுடன் குழந்தைகள் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

أحدث أقدم

Search here!