கணவனால் கைவிடப்பட்ட, மணவாழ்வு முறிந்த பெண்களுக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உணவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு, மணவாழ்வு முறிந்து தனியாக வசிக்கும் பெண்களின் பெயர், கணவனின் ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ளது. அந்த பெண்களின் பெயரை நீக்க, கணவர் முன்வருவதில்லை.

நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாததால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. இதனால், அவர்களது உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.இத்தகைய பெண்களின் ஆதார் எண், கணவரின் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டு இருந்தால், அவரது பெயரை சம்பந்தப்பட்ட அலுவலர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, குடும்ப தலைவரின் அனுமதியின்றி ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும்.


நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் கேட்காமல், அந்த பெண்ணிற்கு புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!