‘டாலர்’ எப்படி உருவானது? - EDUNTZ

Latest

Search here!

Friday 8 October 2021

‘டாலர்’ எப்படி உருவானது?

உலகிலேயே முக்கியமான பணம் என்றால், அது டாலர்தான். அதன் வரலாற்றையும் முக்கியத் தகவல்களையும் தெரிந்து கொள்வோம். டச்சு, ஸ்பெயின், இங்கிலாந்து நாட்டு வியாபாரிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்பு வரை அமெரிக்கப் பழங்குடி மக்களிடம் இந்த நாணய முறையே இல்லை. 

அமெரிக்காவுக்கு வந்த டச்சு வணிகர்களால்தான் முதன்முதலில் பணம் புழங்கத் தொடங்கியது. 16-ம் நூற்றாண்டில், டச்சு நாணயங்கள் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டன. ஆம், அமெரிக்காவின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில்தான் டச்சு நாட்டு வெள்ளி நாணயங்கள் அச்சாகின. ‘தால்’ என்றால் ஜெர்மன் மொழியில் பள்ளத்தாக்கு என்று அர்த்தம். 

தால் பகுதியில் அச்சானதால், இந்த நாணயங்கள் ஜோஹிம்ஸ் தாலர் என்றே அழைக்கப்பட்டு, பின்னர் நாளடைவில் மருவி, ‘டாலர்' என்றானது. பின்னர், ஏறக்குறைய வட அமெரிக்கா முழுவதும் இங்கிலாந்து வசமானதும், பிரிட்டன் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தன. இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்றதும் சீரமைக்கப்பட்ட நாணயம் 1785-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் வெளியானது. 

 100 சென்ட் ஒரு டாலர் என்ற அளவில் இது புழக்கத்துக்கு வந்தது. ஜிம்பாப்வே, ஈக்குவேடார், பனாமா உள்ளிட்ட 10 நாடுகளின் புழக்கத்திலிருந்து இன்று உலகையே ஆட்டிப்படைக்கிறது இந்த நாணயம்.

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]