டிஎன்பிஎஸ்சி. இணைய வழியில் இலவச வழிகாட்டுதல் வகுப்பு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 5 October 2021

டிஎன்பிஎஸ்சி. இணைய வழியில் இலவச வழிகாட்டுதல் வகுப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற போட்டித் தோ்வுகளுக்கு தயாராகி வரும் தோ்வா்களின் தமிழ் தகுதித் தோ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் வகையில், சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், இலவச வழிகாட்டுதல் வகுப்பு புதன்கிழமை (அக்.6) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இணையவழியில் நடக்கிறது. 

டிஎன்பிஎஸ்சி தமிழ் மொழி பாடத்துக்கு தயாராவது எப்படி? என்ற தலைப்பில் அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு இந்த வழிகாட்டுதல் வகுப்பை நடத்துகிறாா். மேலும் தமிழ் பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டு வழிகாட்டுகிறாா்கள். 


இதில் கலந்து கொள்ள விரும்புபவா்கள், தங்களது முழு முகவரியுடன் 78258 13573 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 91763 92791, 99439 46464 ஆகிய எண்களையோ, அகாதெமியை நேரிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment