பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் அரசாணை அமல்படுத்த உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Monday 4 October 2021

பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் அரசாணை அமல்படுத்த உத்தரவு

பள்ளிகளுக்கு நிரந்தரஅங்கீகாரம் வழங்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச் செயலர்கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனு:தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி, ஒவ்வோர் ஆண்டும் அதை புதுப்பிக்கும்படி கூறுகின்றனர்.கல்வி நிறுவனம் துவங்குவது, ஒருவரது அடிப்படை உரிமை. ஒவ்வோர் ஆண்டும் அங்கீகாரம் பெறும்படி கூறுவது சரியல்ல. அவ்வாறு கட்டுப்படுத்துவது சட்டவிரோதமானது. தற்காலிக அங்கீகாரம் வழங்குவதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

பள்ளிகள் தொடர்பாக புகார்கள் வந்தால், அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்துக்கு அங்கீகாரம் என சட்டம், விதிகளில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.எனவே, தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கு பதில், நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 


தனியார் பள்ளிகள்சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் விஜய் ஆனந்த், ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகினர். 

மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

கடந்த 1994 செப்டம்பரில் பிறப்பித்த அரசாணையின்படி, நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரி, கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 1994ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், அதைத் தொடர்ந்து பல உத்தரவுகள் வந்திருப்பதாக தெரிவிக்கப் பட்டது. 

கடந்த 1994ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமலில் இருப்பதால், நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி உள்ளனர். அதன்பின் வந்த அரசு உத்தரவுகளை பரிசீலிக்கும் போது, 1994ல் வெளியான உத்தரவு பற்றி எந்த குறிப்பும் இல்லை.எனவே, 1994ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமலில் இருக்கும் வரை, அதை அரசு அமல்படுத்த வேண்டும். ஆறு வாரங்களில் இது குறித்து, மெட்ரிக்பள்ளி இயக்குனர் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment