பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், அரசு வேலை கிடைக்க உதவி செய்யும் வகையில், 'ஹெல்ப் லைன்' வசதியை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் துவக்கியுள்ளது.
நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் உட்பட மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது.
இந்நிலையில், யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு வேலை பெற விரும்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கும், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தோருக்கும் உதவும் வகையில் ஹெல்ப் லைன் வசதி துவக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெல்ப் லைன் வசதி அனைத்து நாட்களிலும் செயல்படும். இதை தொடர்பு கொண்டு, தேர்வு தொடர்பாக கேட்கப்படும்.கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். இதற்காக 1800118711 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இது முற்றிலும் இலவசமானது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment