கைவினை தேசிய விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு 

கைவினை கலைஞர்கள், தேசிய, ஷில்ப குரு விருதுகளுக்கு விண்ணப்பிக்க, மத்திய ஜவுளித் துறை அமைச்சக, கைவினை வளர்ச்சி ஆணையரகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு, பாரம்பரிய மரபு கைவினைத் தொழில்களை மேம்படுத்த, கைவினை கலைஞர் கலைத் திறனை ஊக்குவிக்க, தேசிய மற்றும் ஷில்ப குரு ஆகிய விருதுகளை, வழங்கி கவுரவிக்கிறது. 

கடந்த 2019ம் ஆண்டின் ஷில்ப குரு, தேசிய விருதிற்கு, கலைஞர்களை தேர்வு செய்ய, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுக்கு 33 பேர், ஷில்ப குரு விருதுக்கு 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேசிய விருது, 19 கைவினை பிரிவுகளில் 20 பேருக்கும்; பெண் கலைஞர்களுக்கு ஐந்து பேருக்கும்; அழிந்துவரும் கைவினைப் பொருட்கள் கலைக்கு ஐந்து பேருக்கும்; புத்தாக்க வடிவமைப்பிற்கு மூன்று பேருக்கும் என, வழங்கப்பட உள்ளது.

தேசிய விருதிற்கு 30 வயது, ஷில்ப குரு விருதிற்கு 50 வயது நிறைந்தவர் என, விண்ணப்பிக்கலாம். இத்துறையின் http://www.handicrafts.nic.in/ என்ற இணையதளத்தில், விபரங்கள் அறிந்து, நவ., 30ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!