மின்சார வாகனம் சுற்றுச்சுழலுக்கு நன்மை அளிக்குமா?. - EDUNTZ

Latest

Search here!

Monday 4 October 2021

மின்சார வாகனம் சுற்றுச்சுழலுக்கு நன்மை அளிக்குமா?.

தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மக்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. 

இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மற்றொரு புறம், டீசல் விலையோ பெட்ரோலுக்கு நிகரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு லிட்டர் டீசல் விலை, பெட்ரோல் விலையை விட 5 ரூபாய்தான் குறைவாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக, புவி வெப்பமடைதல் தற்போது ஒரு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கிறது. காற்று மாசுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று வாகனங்களில் இருந்து வரும் புகை. உலகம் முழுவதும் காற்று மாசு என்பது அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் 20 கோடிக்கும் மேலான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயங்கி வருவதாக மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

கனடா மற்றும் அண்டார்டிகாவில் எல்லா நேரத்திலும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்கள் உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கி வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபட்டால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் தான். இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக காற்று மாசுபாட்டை தடுக்க மின்சார வாகனங்களின் வருகையை ஊக்குவித்து வருகின்றன. மின்சார வாகனங்களை மக்கள் விரைவாக ஏற்றுக்கொள்வதற்கு பல்வேறு மானியங்களையும் வழங்குகின்றன.முன்பெல்லாம் மின்சார வாகன உற்பத்தியில் ஓரிரு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்த நிலையில், 

தற்போது அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும் "இவி' எனப்படும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன. நச்சுகாற்றை ஒழிப்பது சிரமம்தான் என்று பலரும் நினைக்கும் நேரத்தில் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் வருகை பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதை சாலைகளில் பார்க்க முடிகிறது. பிற வாகன நம்பர் பிளேட்டுகளை விட பச்சை நிறத்திலான எலக்ட்ரிக் வாகன பயன்பாடு தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் முக்கியத்துவம் பெறுவது பேட்டரிகள். இந்த பேட்டரி தயாரிப்பு என்பது சற்று கடினமான பணி தான். அர்ஜென்டினா போன்ற உவர் நிலங்களில் இருந்துதான் பேட்டரி தயாரிப்பதற்கான மூலப்பொருள் லித்தியம் கார்பனேட் தோண்டி எடுக்கப்படுகிறது. 14 ஆயிரம் டன் லித்தியம் தயாரிக்க 42 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என கூறப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இந்த லித்தியம் கார்பனேட் எடுக்க முடியாது.

மிகவும் வறண்ட உவர் நிலங்களில் இருந்துதான் இது பெறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். பல தனியார் நிறுவனங்கள் லித்தியம் எடுத்து வருகின்றன. இந்த பேட்டரிகளின் ஆயுட்காலம் அதிகபட்சம் 4 முதல் 5 ஆண்டுகள்தான் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் கார் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படலாம் என்றாலும், 


அதன் பேட்டரி தயாரிக்க இப்படி தண்ணீர் செலவாக்கப்படுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புதானே. இந்தியாவில் இந்த ஆண்டுதான் மின்சார கார்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகின்றன.சுற்றுச்சூழலுக்கு நல்லது என கூறப்படும் பெட்ரோல், டீசல் கார்களின் விலையை விட இந்த கார்களின் விலை மிக அதிகம். கோனா வகை கார்கள் வீட்டு மின்சாரத்தில் 19 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும், டி.சி மின்சாரம் என்றால் 6 மணி நேரம் ஆகும். 

ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கி.மீ வரை பயணிக்கலாம். ஆனால் இந்த பேட்டரிகள் அதிகபட்சமாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தமுடியும். அதன்பின் இதை மாற்றியாக வேண்டும். அப்படி மாற்றப்படும் பேட்டரி கழிவுகள் எப்படி கையாளப்படும் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், லித்தியம் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்கின்றார்கள்.

No comments:

Post a Comment