IGNOU மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர். கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

ஜூலை பருவ மாணவர் சேர்க்கை அக்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்குப் பொருந்தாது. தொலைதூரக் கல்வி படிப்புகளில்சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழ கத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!