உடல் ஊனமுற்ற நபர்களுக்கான (திவ்யாங்ஜன்) பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் (PDUNIPPD), புதுடெல்லிக்கு இயக்குனர் நியமனம் செய்தல் - அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Friday 8 October 2021

உடல் ஊனமுற்ற நபர்களுக்கான (திவ்யாங்ஜன்) பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் (PDUNIPPD), புதுடெல்லிக்கு இயக்குனர் நியமனம் செய்தல் - அறிவிப்பு

இந்திய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை அறை எண்: 517, 5-வது தளம், அந்த்யோதயா பவன், CGO வளாகம், புதுடெல்லி-110003. தேதி 29 செப்டம்பர் 2021 உடல் ஊனமுற்ற நபர்களுக்கான (திவ்யாங்ஜன்) பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் (PDUNIPPD), புதுடெல்லிக்கு இயக்குனர் நியமனம் செய்தல் 

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MSJ & E), உடல் ஊனமுற்ற நபர்களுக்கு (திவ்யாங்ஜன்) அதிகாரமளித்தல் துறை, இந்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான உடல் ஊனமுற்ற நபர்களுக்கான (திவ்யாங்ஜன்) பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் (PDUNIPPD), புதுடெல்லிக்கு இயக்குனர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதவிக்கு அனுமதிக்கத்தக்க அலவன்சுடன் பே மேட்ரிக்ஸ் நிலை 13 (ரூ.123100-215900)-படி சம்பளம் வழங்கப்படும் மற்றும் இது ஆரம்பத்தில் 2 வருட காலத்திற்கு டெபுடேசன் / குறுகிய கால ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்படும். மேலும் செயல்திறனை ஆய்வு செய்த பிறகு ஆண்டு அடிப்படையில் 5 வருடம் வரை நீட்டிக்கப்படலாம். 2. விரிவான விளம்பரம், விண்ணப்ப மாதிரி படிவம் முதலியன துறையின் இணையதளம் www.disabilityaffairs.gov.in மற்றும் நிறுவனத்தின் இணையதளம் அ.து. http://www.iphnewdelhi.in/-ல் கிடைக்கும். விண்ணப்பம் பெறப்படுவதற்கான கடைசி தேதி எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்கள் ஆகும். (நவீன்குமார்) சார்பு செயலாளர், இந்திய அரசு davp 38117/11/0028/2122

No comments:

Post a Comment