கனமழை காரணமாக நாளை (08.11.2021) மற்றும் நாளை மறுதினம் (09.11.2021) நடைபெறவிருந்த எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு!!! - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 7 November 2021

கனமழை காரணமாக நாளை (08.11.2021) மற்றும் நாளை மறுதினம் (09.11.2021) நடைபெறவிருந்த எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு!!!

அனுப்புநர் 

சா. சேதுராமவர்மா, 
அரசுத் தேர்வுகள் இயக்குநர், 
சென்னை - 600 006. 

பெறுநர் 

செய்தி ஆசிரியர், 
அனைத்து ஊடகங்கள் 

ந.க.எண். 011220/டி / 2021 நாள் : 07.11.2021 

ஐயா / அம்மையீர், 

பொருள் : தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 - கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைத்தல் குறித்து செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் - தொடர்பாக. 

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்தது. தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதரத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத் தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும். 

இச்செய்திக்குறிப்பினை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இது செய்திக்குறிப்பு மட்டும். விளம்பரம் அல்ல. 

தங்கள் நம்பிக்கையுள்ள, 

ஓம்/- இயக்குநர்
Download File

No comments:

Post a Comment