இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 18 November 2021

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டம்‌, மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில் நடப்பு கல்வி ஆண்டில்(2021-2022) (3 ஆண்டுகள்) ஓதுவார் பயிற்சி பள்ளி தேவார இசை ஆசிரியர், சங்கீத இசை ஆசிரியர்(குரலிசை) பணிக்கு மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை பணியிடம் : திருச்சி சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோவில் மொத்த காலியிடங்கள் : 02 பணி: தேவார இசை ஆசிரியர் - 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். தேவார இசைத் துறையில் 5 ஆண்டுகளுக்கு குறையாத தொழில்முறைப் பணியறிவு பெற்றிருக்க வேண்டும். பணி: இசை ஆசிரியர்(குரலிசை) - 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். தேவார இசைத் துறை மற்றும் சங்கீத துறையில்(குரலிசைத்துறை) 5 ஆண்டுகளுக்கு குறையாத தொழில்முறைப் பணியறிவு பெற்றிருத்தல் வேண்டும். 

அல்லது மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகம், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலம் இசையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது தலைப்பு பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.samayapurammariammantemple.org அல்லது https://hree.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112. விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2021

No comments:

Post a Comment