இந்து சமய அறநிலையத்துறை 10 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமன அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Saturday, 27 November 2021

இந்து சமய அறநிலையத்துறை 10 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமன அறிவிப்பு

கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள சட்டப்பிரிவு 46(i)-ன் கீழ்

பிரசுரம் செய்யப்பட்ட கீழ்க்கண்ட விவரப்படியான திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா

அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் உரிய

படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 12.12.2021

தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

திருக்கோயில் பெயர் மற்றும் முகவரி

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம்.

அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயில், திருவந்திபுரம், கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம்.

அருள்மிகு வீர ஆஞ்சநேயர்சுவாமி திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்,

கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம்.

அருள்மிகு திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.

குறிஞ்சிப்பாடி வட்டம் கடலூர் மாவட்டம்.

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், வேலுடையான்பட்டு,

நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம்.

அருள்மிகு, வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம்.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம்.

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்,

விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்.

9. அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.

10. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திட்டக்குடி நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம்.

முகவரி

இணை ஆணையர் அலுவலகம்

இந்து சமய அறநிலையத்துறை

நெம்பர் 8, ஆற்றங்கரை தெரு,

புதுப்பாளையம், கடலூர்-1.


DOWNLOAD SHORT NOTICE HERE

விண்ணப்ப படிவங்களை கீழ்க்கண்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

1. இணை ஆணையர் அலுவலகம் இந்து சமய அறநிலையத்துறை, கடலூர்.

2. உதவி ஆணையர் அலுவலகம் இந்து சமய அறநிலையத்துறை, கடலூர்.

3. செயல் அலுவலர் அலுவலகங்கள், மேற்படி திருக்கோயில்கள்.

4. ஆய்வர் அலுவலகங்கள் இந்து சமய அறநிலையத்துறை கடலூர்/பண்ருட்டி/

குறிஞ்சிப்பாடி/புவனகிரி/சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் விருத்தாசலம் திட்டக்குடி.

விண்ணப்பிப்பதற்கு உரிய தகுதி மற்றும் தகவின்மை குறித்து மேற்கண்ட அலுவலகங்களில் விவரம் அறிந்து
கொள்ளலாம்,
இணை ஆணையர்
இந்து சமய அறநிலையத்துறை,
கடலூர்.
வெ.ஆ.எண்.117/செ.ம.தொ.அ/விளம்பரம் கடலூர் நாள்- 26/11/2021
“ சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்”

No comments:

Post a Comment