உத்தர பிரதேசத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவமாக சீருடை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் சீருடையின் தரம் மோசமாக இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து சீருடை,புத்தக பை, காலணி வாங்க பெற்றோரின் வங்கிக் கணக்கில்நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்தது. கடந்த 6-ம்தேதி புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து சுமார்1.2 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் தலாரூ.1,100-ஐ அரசு செலுத்தியுள்ளது.
புதிய திட்டம் பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து லக்னோவை சேர்ந்த அமீனா பானோ கூறும்போது, ‘‘எனது பிள்ளைகள் 4, 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். முன்பு பள்ளிகளில் இலவசமாக சீருடை வழங்கப்பட்டது. தற்போது ரொக்க பணத்தை நேரடியாக வழங்கியிருப்பதால் தரமான சீருடை, புத்தக பை, காலணிகளை வாங்க முடிந்தது. அரசின் புதிய திட்டத்தை வரவேற்கிறோம். எனினும் தொகையை உயர்த்தி வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார். பெரும்பாலான பெற்றோர் இதே கருத்தை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment